தினமணி 27.03.2017
மேலும் 3 மாநகராட்சி: தமிழக அரசு பரிசீலனை
ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்,
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல்
ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய
நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பரிந்துரையை சென்னை மாவட்ட நிர்வாகம்
தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் அனுப்பிய இந்த
பரிந்துரையை தமிழக அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. அவ்வாறு
மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள
மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.