தினமணி 14.03.2013
திருவலம் பேரூராட்சியில் 3 நாள்களில் ரூ.2 லட்சம் வரிவசூல்
திருவலம் பேரூராட்சியில் 3 நாள்கள் நடைபெற்ற தீவிர வரி வசூல் சிறப்பு முகாமில் ரூ.2 லட்சம் சூல் செய்யப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தெரிவித்துள்ளார்.
வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.எம்.மலையமான் திருமுடிக்காரி உத்தரவின் பேரில், திமிரி, பனப்பாக்கம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டனர். இந்த மூன்று நாள்களில் ரூ. 2 லட்சம் வசூலிக்கப்பட்டதாக திருவலம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.கோமதி தெரிவித்தார்.