தினமணி 20.05.2010
கோபி நகராட்சியில் 3 நிமிடங்களில் 3 கூட்டங்கள்!
கோபி, மே 19: கோபி நகராட்சி கூட்டம் புதன்கிழமை காலை கூட்டப்பட்டது. இதில் 3 நிமிடங்களில் ஒரு தீர்மானத்தை தவிர மற்ற அனைத்து தீர்மானஙகளும் நிறைவேற்றப்பட்டன.
÷கோபி நகராட்சியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி, மார்ச் 31ம் தேதி மற்றும் மே 4ம் தேதி நடைபெற்ற மூன்று கூட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியவில்லை.
÷இந்நிலையில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு 47 தீர்மானங்களுடன் கோபி நகராட்சி சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. முதல் தீர்மானத்தை படித்தவுடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்ற உறுப்பினர்கள் சம்மதித்தனர்.
அடுத்து 27 தீர்மானங்களுடன் உள்ளூர் திட்ட குழும சிறப்புக் கூட்டம் மற்றும் 41 தீர்மானங்களுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது.
÷இந்தக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை தவிர அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மூன்று நிமிடங்களில் மூன்று கூட்டங்களும் முடிவடைந்தன.