தினமணி 07.09.2010
3 ஆண்டுகளாக கட்டப்படும் எரிவாயு மயானம்! 3 ஆண்டுகளாக கட்டப்படும் எரிவாயு மயானம்!
மேட்டுப்பாளையம், செப். 6: மேட்டுப்பாளையம் கோவிந்தம்பிள்ளை மயானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் எரிவாயு மயான கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷மேட்டுப்பாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் பயன்பாட்டிற்கென நெல்லித்துறை சாலையிலுள்ள கோவிந்தம்பிள்ளை மயானத்தில் | 42.60 லட்ச மதிப்பில் எரிவாயு மயானம் அமைக்கும் பணி கடந்த 2007ம் ஆண்டில் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
பல்வேறு காரணங்களினால் தாமதமான இக் கட்டுமானப் பணிகள், தற்போது 75 சதவீதம் மட்டும் முடிக்கப்பட்டுள்ளதால், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட, பெரியநாயக்கன்பாளையமோ அல்லது கோவை புறநகர் பகுதிகளுக்கோ செல்ல வேண்டியுள்ளது. ஆதலால் விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆனையர் சுந்தரம் கூறுகையில், தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இயக்கப்படும் என்றார்.