தினகரன் 26.05.2010
நல்ல மழை பெய்தாலும் ஜூலை 3வது வாரம் வரை குடிநீர் வெட்டு நீடிக்கும்
மும்பை, மே 26: எதிர்பார்ப் பதைப்போல இன்னும் 2 வார காலத்தில் நல்ல மழை பெய்யத் தொடங்கி னாலும் மும்பையில் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரை குடிநீர் வெட்டு தொடர்ந்து நீடிக் கும் என மாநகராட்சி கூறியுள்ளது.
கடந்த மழை சீசனில் போதிய அளவு மழை பெய்யாததால் மும்பையில் 15 சதவீதம் குடிநீர் வெட்டு அமலில் இருக்கிறது. இந்த குடிநீர் வெட்டை நீக்குவது குறித்து ஜூலை 15ம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என மாந கராட்சி அதிகாரிகள் கூறி னர்.
கேரளாவில் இந்த மாத இறுதியில் பருவமழை பெய்யத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் ஜூன் 10ம் தேதி மழை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. எனினும் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஆறு ஏரிகளிலும் ஓரளவு தண்ணீர் நிரம்பும் வரையில் குடிநீர் வெட்டு தொடரும் என துணை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் கொண்டாலியா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மே லும் கூறுகையில், “ஒவ் வொருவரையும் போலவே இந்த சீசனில் பருவமழை நன்றாக பெய்யும் என்றே நாங்களும் நம்புகிறோம். ஆனாலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைக்காக ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரையில் குடிநீர் வெட்டை நீக்க முடி யாது. ஜூலை 15ம் தேதி வாக்கில் நிலைமையை மறு ஆய்வு செய்ய இருக்கி றோம்Ó என்றார்.
பருவமழை நன்றாக பெய்யும் ஆண்டுகளில் மோடக் சாகர் மற்றும் துளசி ஏரிகள் ஜூலை மாதம் மத்தியில் நிரம்பி வழியத் தொடங்கும். விகார் ஏரி ஆகஸ்ட் இரண் டாவது வாரத்தில் நிரம்பும். அப்பர் வைதர்ணா மற்றும் பாட்சா ஏரிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் நிரம்பும் என்பது குறிப்பிடத் தக்கது.