தினகரன் 14.06.2010
பாதாள சாக்கடை திட்ட பணி 3 மாதத்தில் முடிவடையும் நகராட்சி நிர்வாகம் அறிவிப்புதிண்டுக்கல், ஜூன் 14: திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணி 3 மாதத்தில் முடிவடையும் என நகர்மன்ற தலைவர் நடராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல் நகரில் ரூ.46 கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கான கழிவுநீர் நீரேற்று நிலையம் திண்டுக்கல் பாறைபட்டியில் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்கு கழிவுநீர் செல்ல திண்டுக்கல் பேகம்பூரில் இருந்து பாறைபட்டிக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை நகர்மன்ற தலைவர் நடராஜன் ஆய்வு செய்தார்.
பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்ட பணி பேகம்பூர் பகுதிகளில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து வாரந்தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தபட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் குறித்த நிறை, குறைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் இப்பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் லெட்சுமி, தலைமை பொறியாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.