தினகரன் 09.08.2010
மலேரியாவுக்கு மேலும் 3 பேர் பலி கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
மும்பை, ஆக.9: மும்பை யில் மலேரியா நோய்க்கு மேலும் 3 பேர் பலியானார் கள். டெங்கு காய்ச்சலில் ஒருவர் உயிரிழந்தார்.
கிராண்ட் ரோட்டை சேர்ந்த 16 வயது சிறுவன், தாராவியை சேர்ந்த 40 வயது ஆண் மற்றும் ஒர்லி யை சேர்ந்த 45 வயது உதவி போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் ஆகிய மூவரும் மலேரியாவுக்கு பலியானார்கள். இதை யடுத்து இம்மாதத்தில் மட்டும் இந்நோய் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக் கை 11 ஆக அதிகரித்து இருக்கிறது.
உதவி சப்&இன்ஸ்பெக் டர் ராம்தாஸ் ராவுத், தாதர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஜூலை 29ம் தேதியில் இருந்தே உடல் நலக்குறைவு டன் இருந்து வந்தார். பைகுலா பாலாஜி மருத் துவமனையில் நேற்றுமுன் தினம் சிகிச்சை பலனளிக் காமல் உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு ஒர்லியை சேர்ந்த 18 வயது வாலிபர் பலியானார். கடந்த 2 நாட்களில் மழை சம்மந்தப்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்ட 729 பேர் மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இவர்களில் 216 பேருக்கு மலேரியா நோய் இருந்தது.
417 பேருக்கு காய்ச்சல் இருந்தது. டெங்கு காய்ச்ச லால் 4 பேர் பாதிக்கப்பட் டிருந்தனர். 3 பேர் லெப் டோயைரோசிஸ் நோயால் தாக்கப்பட்டிருந்த னர். 89 பேருக்கு வயிற்றுப்போக்கு காணப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட் டது.
இதற்கிடையே மலேரி யாவை கட்டுப்படுத்த மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டுமானங்கள் நடை பெறும் இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் பில் டர்கள் பார்த்துக்கொள் கிறார்களா என்பதை கண் காணிப்பதற்காக மேற்கு புறநகர் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கூடுதல் மாநகராட்சி கமிஷனர் மணீஷா மாய்ஸ்கர் கூறு கையில், “மேற்கு புறநகர் பகுதிகளில்தான் கட்டு மான பணிகள் நிறைய நடந்து வருகின்றன. இங்குள்ள வார்டுகளில் 5 உறுப்பினர் கமிட்டிகளை அமைத்துள்ளோம். வார்டு அதிகாரி, சுகாதார அதிகாரி, பூச்சிகள் கட்டுப் பாட்டு அதிகாரி, பில்டிங் இலாகாவின் நிர்வாக பொறியாளர் உள்ளிட் டோர் இதில் உறுப்பினர் களாக உள்ளனர். கட்டு மானங்கள் நடை பெறும் இடங்களில் கொசு உற்பத் தியாகாமல் இருப்பதை உறுதி செய்வது இந்த கமிட்டிகளின் பொறுப்புÓ என்றார்.