தினகரன் 13.08.2010
3ம் நிலையில் இருந்து தாந்தோணி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்வு
கரூர், ஆக. 13: தமிழக அரசு 49 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 36 நகராட்சிகளை வருமானத்தின் அடிப்படையில் பிரித்து தரம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதில் தாந்தோணியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சியையொட்டியுள்ள தாந்தோணி பகுதி 1937ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது.
அதன்பின் 32 ஆண்டுகள் கழித்து 1969ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்து 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 6 ஆண்டுகள் கழித்து தற்போது தாந்தோணி முதல்நிலை நகராட்சியாக கடந்த 9ம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.
தாந்தோணி வளர்ச்சியின் முதல் படியாக கடந்த 1966ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரி வந்தது. கரூர் வருவாய் கோட்டம் திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1995ம் ஆண்டு கரூர் மாவட்டம் உருவானது. தாந்தோணியில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம், எஸ்.பி. அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என அமைந்து விரைந்து வளர்ந்து வருகிறது.
இந்நகராட்சி 13.5 ச.கி.மீட் டர் பரப்பளவு கொண்டது. கடந்த 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மக்கள் தொகை 20,760. இது 2001ம் ஆண்டில் 10,380 என அதிகரித்து 31,140ஆக அதிகரித்தது. தற்போதைய தோராய மக்கள் தொகை 65,000.
இதுகுறித்து நகராட்சி தலைவர் ரேவதி கூறியதாவது:
இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முன்மொழிவு அனுப்பியிருந்தோம். வருமான அடிப்படையில் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி உள்ள னர். முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ள தால் ஆணையாளர் நியம னம் செய்யப்படுவார்.
மேலும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும், நகராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.