மாலை மலர் 17.08.2010
3
ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
, ஆக. 17- சிவகாசி வரி செலுத்துவோர் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-தமிழகம் முழுவதும் ஏரி
, குளங்கள் உள்ளிட்ட அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு 2006-ம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. இந்த உத்தரவால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளதால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது
. இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த ஆணையானது தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களையும்
, நீர் நிலைகளையும் ஆக்கிர மிப்போரை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால்
, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அரசின் புதிய உத்தரவான புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்குவதை அமல்படுத்த கூடாது என்று தடை விதித்தனர்.