மாலை மலர் 13.12.2010
பூந்தமல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட
3 வீடு– 6 கடைகளுக்கு “சீல்” நகராட்சி கமிஷனர் நடவடிக்கைபூந்தமல்லி, டிச.13-பூந்தமல்லியில் உள்ள பல கட்டிடங்கள் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன.இதையடுத்து நகராட்சி கமிஷனர் சுமா கடந்த 3-ந்தேதி நகராட்சி அனுமதியின்றி கட்டிய கட்டிட உரிமையாளர்கள் உரிய அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அக்கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் சில கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
அதன்பிறகும் யாரும் நகராட்சியிடம் உரிமை பெறுவதற்காக விண்ணப்பம் கூட வாங்கவில்லை.இந்நிலையில் கமிஷனர் சுமா, நகரமைப்பு ஆய்வாளர் தினகர் தலைமையில் அதிகாரிகள் இன்று பூந்தமல்லி பாரிவாக்கத்தை சேர்ந்த திலகவதி அனுமதியின்றி கட்டிய 3 வீடுகள், 3 கடைகளுக்கு “சீல்” வைத்தனர்.
இதேபோல் எம்.ஜி. ரோட்டில் உள்ள ராஜேஸ்வரிக்கு சொந்தமான 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுபற்றி கமிஷனர் சுமா கூறும்போது, நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட அனைத்து வீடு– கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றார்.