மாலை மலர் 23.09.2009
கன்னியாகுமரியில் 3 ஆயிரம் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு இந்த மாதம் இறுதியில் வழங்கப்படுகிறது
கன்னியாகுமரி,செப்.23-
கன்னியாகுமரியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஆயிரம் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு இந்த மாத இறுதியில் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரே சிறப்பு நிலை பேரூராட்சி கன்னியாகுமரி பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பால்குளம், கல்விளை, மந்தாரம்புதூர், மருந்துவாழ்மலை, தேரூர், ஒற்றையால்விளை உள்பட 9 குடிநீர் திட்ட கிணறுகள் உள்ளன. இவற்றின் 2 நாட் களுக்கு ஒரு முறைவிட்டுவிட்டு கன்னியாகுமரி பேரூராட் சிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு 1982-ம் ஆண்டிலிருந்து காத்தி ருந்தனர். இப்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டது.
அதன்பயனாக 3 ஆயிரத் திற்கு மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு பேரூராட்சி அலுவலகத்தில் மனுக்கள் குவிந்தன.
அதைத்தொடர்ந்து இதற்கான ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், லாட்ஜ், கடை மற்றும் ஓட்டல்களுக்கு ரூ. 15 ஆயிரம் வீதமும் டெப் பாசிட் தொகை வசூலிக்கப் பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் 3 ஆயிரம் வீடு களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.