தினமணி 16.08.2013
தினமணி 16.08.2013
சேலம் மாநகரில்3 நாள்களுக்கு குடிநீர் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமை
(ஆகஸ்ட் 16) முதல் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி
வைக்கப்படுவதாக, மாநகராட்சி ஆணையர்
மா.அசோகன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மேட்டூர் – ஆத்தூர்
குடிநீர் வழித் தடத்தில் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதற்கான
பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் 16-ஆம் தேதி முதல் 18-ஆம்
தேதி வரை மேற்கொள்கிறது. இதனால், சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு இந்த 3
நாள்களிலும் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.