தினத்தந்தி 27.07.2013
ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டில் 2,269 குடும்பங்களுக்கு
மிக்சி, கிரைண்டர்–மின்விசிறி அமைச்சர் கே.வி.ராமலிங்கம் வழங்கினார்
ஆயிரத்து 269 குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை அமைச்சர்
கே.வி.ராமலிங்கம் வழங்கினார்.
அமைச்சர் வழங்கினார்
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும்
ஏழை–எளியவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி
வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி 30–வது வார்டு பகுதிக்கு உள்பட்ட
பொதுமக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும்
விழா கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில்
நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர்
கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கி, அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்து 269
குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி
வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர்
மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர்கள் ரா.மனோகரன்,
காஞ்சனா பழனிச்சாமி, கவுன்சிலர் காவிரி செல்வன், மாநகர் மாவட்ட வக்கீல்
அணி செயலாளர் துரைசக்திவேல், இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர்
பி.பி.கே.மணிகண்டன், நகர அவைத்தலைவர் பாலச்சந்தர், மகளிர் அணி செயலாளர்
பானுசபியா, ஈரோடு தாசில்தார் சுசீலா, வருவாய் ஆய்வாளர் பரிமளா, கிராம
நிர்வாக அதிகாரி நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட நிகழ்ச்சிகள்
முன்னதாக நேற்று தமிழக பொதுப்பணித்துறை
அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு காசிபாளையம்
சுப்பிரமணியநகரில் எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட
அங்கன்வாடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். சேனாதிபாளையத்தில்
எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையையும், திண்டல்
புதுக்காலனி பகுதியில் அம்மா திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் பேரில்
தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
பேரோடு ஊராட்சிக்கு உள்பட்ட
மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய குடிநீர் தொட்டியை அமைச்சர்
கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார். மேலும் காலிங்கராயன்பாளையத்தில் நடந்த
அம்மா திட்ட முகாமிலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்
கவுண்டச்சிபாளையம் ஊராட்சியில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கியும்,
குட்டப்பாளையம் ஊராட்சியில் ஏழைகளுக்கு தலா 4 ஆடுகள் வழங்கியும் பொதுமக்கள்
மத்தியில் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி
கணேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து
கொண்டனர்.