தினமணி 16.09.2009
சொத்து வரியை 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் .
சென்னை, செப். 15: அரையாண்டு சொத்து வரியை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: 2009-10-ம் ஆண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை, நிலுவைத் தொகையுடன் சேர்த்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வரியை காசோலை அல்லது கேட்புக் காசோலையாக “வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி‘ என்ற பெயரில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் செலுத்தலாம். அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்–லைனிலும் வரியை செலுத்தலாம்.