தினமணி 22.04.2013
30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமம் ஆகியவை நிலுவையின்றி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.
வரி நிலுவைகள் நூறு சதவீதம் செலுத்த தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயல்அலுவலர் மா.கேசவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.