தினகரன் 09.04.2013
சேமனூரில் சுற்றிதிரிந்த300 தெரு நாய்களுக்கு கு.க ஆபரேசன்
சோமனூர்: சோமனூர் பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய கருமத்தம்பட்டி பேரூராட்சி முடிவு செய்தது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்ட தெருநாய்கள் படிக்கப்பட்டன. அவைகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு மைசில் விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு தனி வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த நாய்களுக்கு 2 நாள் மையத்தில் வைத்து மருந்து மாத்திரைகள், உணவுகள் வழங்கப்படுகின்றன. பின் அந்த நாய்களை பிடித்த இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம், செயல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் குன்னூர் அருவங்காடு மைசில் விலங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் வழிமுறைகள் குறித்து பார்வையிட்டனர்.