தினமலர் 05.01.2015
சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்

சென்னை : சொத்து வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில், 300 கையடக்க இயந்திரங்களை, சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளில் சொத்து வரி வசூலிக்கும் பணியில், 274
வரி வசூலிப்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பு
மையங்கள், வங்கிகள் மற்றும் இணையதளம் மூலம் சொத்துவரி
வசூலிக்கப்படுகிறது.வரி வசூலிப்பாளர்கள் நேரடியாக சென்று, வீடுகள் மற்றும்
வணிக நிறுவனங்களில் வசூல் செய்ய வசதியாக, கையடக்க கருவிகள்
வழங்கப்பட்டன.அவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி பழுது
ஏற்பட்டு வந்தது. அவற்றை சரிசெய்ய முடியாத நிலையில், தற்போது, 300 புதிய
கையடக்க கருவிகளை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.
அதில்,
274 கருவிகள், வரி வசூலிப்பாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட உள்ளன.
மீதமுள்ள கருவிகள், தேவைக்காக இருப்பு வைக்கப்பட உள்ளன. அனைத்து
கருவிகளிலும், சொத்துவரி சம்பந்தமான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு
உள்ளன. புதிய கருவிகள் வழங்கப்பட உள்ளதால், இந்த நிதியாண்டில், சென்னை
மாநகராட்சி சொத்துவரி வசூலிப்பில், 600 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.