தினமணி 29.09.2010
31,35-வது வார்டுகளில் மேயர் குறைகேட்பு
மதுரை,செப்.28: மதுரை மாநகராட்சி 31 மற்றும் 35-வது வார்டுகளில் மேயர் ஜி.தேன்மொழி செவ்வாய்க்கிழமை மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார்.
அப்போது அவர் கூறுகையில், வாரந்தோறும் மண்டலம் வாரியாக மக்கள் குறை தீர்க்கும் நிகழச்சி நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரின் உத்தரவின்பேரில், நாள்தோறும் ஒரு வார்டு வீதம் மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்து சட்டத்திற்குள்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில், விடுபட்ட வார்டுகளுக்கும் சென்று மக்களின் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்யப்படும்.
மேலும், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை பெற்றுள்ள பயனாளிகள், இத்திட்டத்தில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்று பயனடையலாம் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின், மண்டலத் தலைவர் அ. மாணிக்கம், மாமன்ற உறுப்பினர்கள் காளியம்மாள், மகேஸ்வரி, கலைமதி,அழகர்சாமி, மங்களேஸ்வரி, கண்ணன், பழனிச்சாமி,தலைமைப் பொறியாளர் கே. சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் ஆர். விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.