தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் சசிகலாபுஷ்பா தாக்கல் செய் தார். இதில் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடைபெற் றது. ஆணையர் மதுமதி, துணை மேயர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளிலும் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கப்பட்டு பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 201314 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை மேயர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறு கையில்:
தூத்துக்குடி மாநகராட்சியில் இந்த நிதியாண்டு வருவாய் நிதியினங்கள் இறுதிசெய்யப்பட்டதில் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2013-14 ஆம் ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ. 1.4 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் குடிநீர் நிதியில் ரூ. 4.41 கோடி உபரி வருமானம் வரும் என்றும் கல்வி நிதியில் ரூ. 75.25 லட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் என் றும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சொத்துவரி மற்றும் வரி யில்லா இனங்கள் மூலமாக ரூ. 10.50 கோடியும், அரசு சுழல்நிதியாக ரூ. 21.50 கோடியும், அரசு மானிய மாக ரூ. 4.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ. 6.35 கோடியும் என மொத்தம் ரூ. 42.45 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், இந்த ஆண்டு சாலை பராமிப்பு மற்றும் கட்டட பராமரிப்பு போன்றவைகளுக்காக ரூ. 1.50 கோடியும், திட்ட செலவுகளுக்காக ரூ. 10 லட்சமும், பொது சுகாதார பணிகளுக் காக ரூ. 4.25 கோடியும் செலவாகும்.
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் இருக்கைகள் காலி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஏலம் விடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டு இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தால் பின்னர் தணிக்கையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் 18 பேரும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 2 பேரும் புறக்கணித்தனர். இதனால் கூட்ட அரங்கில் இருக்கைகள் காலியாக இருந்தன.