தினத்தந்தி 26.08.2013
பள்ளிகொண்டாவில் 318 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மற்றும்
பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா
மடிக்கணினி வழங்கும் விழா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் பி.ஜி.சுப்பிரமணி, அ.தி.மு.க நகர செயலாளர்
எம்.உமாபதி, துணை தலைவர் நாகராணி, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட அவைத்
தலைவர் டி.கே.முருகேசன், ஒன்றியக்குழு துணை தலைவர் சேரன் உள்ளிட்டோர்
வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சுகாதார துறை
அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு 318 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை
வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன்,
துரைராஜ், விஸ்வநாதன், கிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள்,
ஆசியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.