தினத்தந்தி 11.06.2013
32, 47–வது வார்டில் 6,500 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர் அமைச்சர் வழங்கினார்

திருப்பூர் மாநகராட்சி 32, 47வது வார்டில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழா வுக்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் ஆர்.டி.ஓ. பழனிகுமார் வர வேற்றார்.
மாவட்ட ஊராட்சி தலை வர் சண்முகம் முன்னிலை வகித்தார். துணைமேயர் குணசேகரன், மண்டல தலை வர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துச்சாமி, கிருத்திகா ஆகியோர் வாழ்த்தி பேசி னார்கள். இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6,500 பேருக்கு இல வச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவைற்றை வழங்கி பேசினார்.
விழாவில் தாசில்தார் அகமத்துல்லா, வருவாய் ஆய் வாளர் சமரசம், கிராம நிர்வாக அதிகாரி கருணாநிதி, நிலைக் குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் சுப் பிரமணியம், சுஜாதா, கீதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர். முடிவில் சிறப்பு அமலாக்க திட்ட தனி துணை கலெக் டர் தர்மராஜ் நன்றி கூறினார்.