தினமணி 22.11.2013
நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம்
தினமணி 22.11.2013
நீலம்பூர் அருகே ரூ.32 லட்சத்தில் தார்ச் சாலைப் பணி துவக்கம்
நீலம்பூர் அருகே, ரூ.32 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது .
நீலம்பூர் அருகே, அவிநாசி சாலையிலிருந்து அம்பேத்கர் நகருக்கு செல்லும்
தார்ச்சாலை நீண்ட காலமாக மிகவும் பழுதடைந்திருந்தது. அதைச் சீரமைக்கக்கோரி,
அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சூலூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,
அப்பகுதியில் 1.1 கி.மீ. நீளத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்க ரூ.32 லட்சம்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.தினகரன், மயிலம்பட்டி ஊராட்சித்
தலைவர் ராதாமணி செல்வராஜ், வடக்கு மாவட்ட தே.மு.தி.க. முன்னாள் பொருளாளர்
செந்தில், மாதப்பூர் ஊராட்சித் தலைவர் ஹரிகிருஷ்ணன், கண்ணம்பாளையம்
பேரூராட்சி உறுப்பினர் ஆறுசாமி, கவிப்பிரியா விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.