ரூ.33.22 லட்சம் மதிப்புள்ள கட்டடங்கள் திறப்பு
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.33.22 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், ஸ்கேன் அறை, மருத்துவமனை கூடுதல் கட்டடம், வணிக கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கட்டடம் ஆகியவற்றை மேயர் செ.ம. வேலுசாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
68-வது வார்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் 80 அடி சாலையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகக் கட்டடம், 72-வது வார்டுக்கு உள்பட்ட டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்கேன் அறை, 51-வது வார்டு டிக்கி பாய் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.6.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம், 81-வது வார்டு திருமால் வீதியில் ரூ.4.02 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிகக் கட்டடம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட கட்டடத்தை மேயர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தார்.
ஆணையாளர் க.லதா, எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, துணை மேயர் லீலாவதி உண்ணி, மாநகரப் பொறியாளர் கே.சுகுமார், மத்திய மண்டலத் தலைவர் கே.ஏ. ஆதிநாராயணன், உதவி ஆணையாளர் (பொ) ஏ.லட்சுமணன், நியமனக் குழு உறுப்பினர் எம்.ராஜேந்திரன், பணிக்குழுத் தலைவர் அம்மன் அர்ச்சுனன், கல்விக் குழுத் தலைவர் ஆர்.சாந்தாமணி, சுகாதாரக் குழுத் தலைவர் எஸ்.தாமரைச்செல்வி, கணக்குக் குழுத் தலைவர் கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜே.அசோக்குமார், ஜே.சசிரேகா, கே.சக்திவேல், எம்.ஏ. குத்புதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.