தினமலர் 25.02.2010
ஒட்டன்சத்திரத்தில் ரூ.34 லட்சத்தில் மின்விளக்கு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம்–தாராபுரம் ரோட்டின் இருபுறமும் 34 லட்ச ரூபாய் செலவில் மின்விளக்கு அமைக்கும் பணி துவங்கியது.ஒட்டன்சத்திரம்–தாராபுரம் ரோட்டில்,நாகணம்பட்டி பைபாஸ் ரோடு பிரிவிலிருந்து ரவுண்டானா வரை ரோட்டின் நடுவில் மின் விளக்கு அமைக்க திட்டமிடப்பட்டது. ரோட்டின் மையப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 25 லட்சம் ரூபாய் செலவில் 3 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.ஒட்டன்சத்திரம் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து 34 லட்சம் ரூபாய் செலவில் இருபுறமும் எரியக்கூடிய மின் விளக்கு பொருத் தப்பட உள்ளது