தினமலர் 06.05.2010
ஒட்டன்சத்திரத்தில் ரூ.34 லட்சத்தில் சோடியம் விளக்கு அமைப்பு
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் 34 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சோடியம் விளக்குகளை கொறடா சக்கரபாணி இயக்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம்–தாராபுரம் ரோட்டில் நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் இருந்து மார்க்கெட் பைபாஸ் ரோடு வரை இருபுறமும் எரியக்கூடிய சோடியம் விளக் குகள் ரோட்டின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் ரவுண்டானாவில் இருந்து மார்க்கெட் பைபாஸ் ரோடு வரை ரோட்டின் ஓரங்களில் சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சி பொதுநிதியில் இருந்து 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள இவ்விளக்குகளை அரசு கொறடா சக்கரபாணி இயக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயக்கொடி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், நகர செயலாளர் கதிர் வேல், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் கண்ணன் உட்பட பலர் பங்கேற் றனர். கவுன்சிலர் முருகேசன் நன்றி கூறினார்.
முன்னதாக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பிரிவுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது. தாசில்தார் பசீர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் ராமதிலகம், மாரியம்மாள்,தனிதாசில்தார் விசுவநாதன்உட்பட பலர் பங்கேற்றனர்.