கும்மிடிப்பூண்டியில், சுற்றித்திரிந்த 35 நாய்களை புளூகிராஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பல தெருக்களில் பெருகிவரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தும் விதத்தில் அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்திட பேரூராட்சித்தலைவர் வி.முத்துகுமரன் தலைமையில் செயல்அலுவலர் கோ.மணிவேல் மற்றும் துணைத்தலைவர் கோமளா கேசவன் ஆகியோர் சென்னையில் உள்ள புளூகிராஸ் அமைப்பிற்கு பரிந்துரை செய்திருந்தனர்.
இதனையடுத்து வேளச்சேரி ருக்குமணி அருண்டேல் டிரஸ்டின் சார்பில் புளூகிராஸ் அமைப்பில் இருந்து ராஜேஷ், கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல்கட்டமாக கும்மிடிப்பூண்டி தெருக்களில் சுற்றித்திரிந்த 35 நாய்களை சென்னைக்கு பிடித்து சென்றனர். அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்கு பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் விடப்படும் என்று புளூகிராஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.