தினமணி 11.06.2013
ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு
காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய அத்திப்பட்டு பாலாற்றுப் படுகையில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ரா.ஆனந்தன் இதைத் தெரிவித்தார்.
அத்திப்பட்டு பாலாற்றுப் படுகையில் இருந்து 4 ஆழ்துளை கிணறுகள் மூலமாக காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. மீதமுள்ள 3 கிணறுகளில் தூர் வாரி, உறைகள் பொருத்தப்பட்டன. மேலும் வறட்சி நிவாரண நிதியில் இருந்து ரூ. மூன்றரை லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.