தினத்தந்தி 22.08.2013
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ரூ.36½ லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டிடம்
புதிய கட்டிடம் கட்டுவதற்கு மேயர் சசிகலாபுஷ்பா நேற்று காலை அடிக்கல்
நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாமுவேல் புரத்தில் மாநகராட்சி
மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிதாக ரூ.36.60 லட்சம்
செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு
மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர்
முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா
கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மற்றும் இளநிலை என்ஜினீயர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பூங்கா
முன்னதாக தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் ரூ.50 லட்சம் செலவில்
சாலையோரத்தில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவுக்கு பாரதரத்னா
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த
பூங்காவை நேற்று காலை மேயர் சசிகலாபுஷ்பா திறந்து வைத்தார்.
தொடர்ந்து பூங்காவில் இலவச யோகா பயிற்சி வகுப்பையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி
பெற்றனர்.