தினமணி 20.11.2009
பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் 3,727 மாணவிகளுக்கு விபத்து காப்பீடு பாலிசி
திருப்பூர், நவ.19: பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் விபத்து காப்பீடு பாலிசியை காந்திநகர் ரோட்டரி சங்கம் வழங்கியது.
திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மே.பள்ளி யில் 3,727 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவிகளின் எதிர்கால கல்வியை கருதில் கொண்டு ரூ.10 லட்சம் மதிப்புடைய பாலிசியை பள்ளியின் பெயரில் காந்திநகர் ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.
பள்ளியில் படிக்கும் ஏதேனும் மாணவியின் தந்தை அல்லது தாய் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இதுதவிர மாணவிகள் விபத்தில் காயமடைந்தால் மருத்துவ செலவுக்காக ரூ.500 பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்விபத்து காப்பீட்டு பாலிசியை பள்ளிக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை மேரிவிமலாபாய் வரவேற்றார்.
மேயர் க.செல்வராஜ் மாணவிகளுக்கான விபத்து காப்பீட்டு பாலிசியை பள்ளி தலைமையாசிரியை யிடம் ஒப்படைத்தார்.
இதில், ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் நாராயணசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்க்ஸ்சௌகத்அலி உள்பட ரோட்டரி நிர்வாகி கள் பலர் பங்கேற்றனர்.