தினமணி 06.08.2013
தெற்கு தில்லியில்குப்பைகளை அள்ள 375 புதிய ரிக்ஷாக்கள்
குறுகிய தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க 375 புதிய ரிக்ஷாக்களை தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதற்கான நிகழ்ச்சி தெற்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுவலகமான சிவிக் சென்டரில் நடைபெற்றது.
இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் ராஜேஷ் கெலாட் கூறியது:
பச்சை வண்ணம் பூசப்பட்ட ரிக்ஷாக்களில் ஓட்டுநரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பைகள் தொடர்பான புகார்களை அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
டிப்பர் வண்டிகள் செல்ல முடியாத தெருக்களில் இந்த ரிக்ஷாக்கள் சென்று குப்பைகளைச் சேரிக்கும் என்றார் கெலாட்.