தினமணி 07.01.2014
புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்
தினமணி 07.01.2014
புதிய மீன் மார்க்கெட்டில் 38 கடைகள் ஏலம்
வேலூர் பெங்களூரு சாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள
மீன் மார்க்கெட்டில் உள்ள ஷட்டர் போடப்பட்ட 38 கடைகளுக்கான ஏலம்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் தற்போது ஆபிஸர்ஸ் லைனில் இயங்கும் மீன்மார்க்கெட்டில் உள்ள
கடைக்காரர்கள் பங்கேற்று 38 கடைகளையும் ஏலத்தில் எடுத்தனர். இக்கடைகளில்
குறைந்தபட்ச மாத வாடகை ரூ.5,200 முதல் அதிகபட்ச வாடகை ரூ.6,500 வரை ஏலம்
போனது.
ஏலத்தை மாநகராட்சி வருவாய் அலுவலர் (பொறுப்பு) ஆர்.கே.கனகசுந்தரி, சந்தை கண்காணிப்பாளர் தனசேகரன் ஆகியோர் நடத்தினர்.
புதிய மீன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளை மீன் மார்க்கெட்
வியாபாரிகளே எடுத்துள்ளதால், தற்போது இயங்கி வரும் மீன் மார்கெட்டை
மூடப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுப்பதில் நீடித்து வந்த சிக்கல்
நீங்கியுள்ளது.