மம்சாபுரம் பேரூராட்சியில் 38 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நாய்களுக்கான சிறப்பு கருத்தடை சிகிச்சை முகாமில் 38 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பேரூராட்சி தலைவர் ஆர்.ராஜா, துணைத் தலைவர் வழக்குரைஞர் பி.அய்யனார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், மம்சாபுரம் பேரூட்சியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, செயல் அலுவலர் பா.ஜெயச்சந்திரசேகரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முகாமில் 38 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமணி, துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் அறுவை சிகிச்சை முகாமை நடத்தினர்.