தினமலர் 27.08.2010
மாநகராட்சி பள்ளிகளில் 39 ஆசிரியர்கள் நியமனம்
மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக இருந்த 39 பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில், “”மதுரை மாநகராட்சியில் 12 உயர்நிலை, 12 நடுநிலை, 14 மேல்நிலைப் பள்ளிகள், 29 துவக்கப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 பேர் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்,” என்றார். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழு தலைவர் பொன்னுத்தாய், துணைகமிஷனர் தர்ப்பகராஜ், கல்வி அலுவலர் வைத்தியலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டனர்.