மாநகராட்சி 39வது வார்டில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதல் ஆழ் துளை கிணறு
வேலூர்: வேலூர் மாநகராட்சி 39வது வார்டில் உள்ள சிவராஜ் நகர், கொளத்து மேடு, ஆகிய பகுதிகளில் நேற்று எம்எல்ஏ விஜய் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். அப்போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதையடுத்து கொளத்து மேடு பகுதியைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை போக்க கூடுதலாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இயங்கி வரும் சின்டெக்ஸ் பொருத்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்தார். அப்போது சரியாக இயங்காத ஆழ்துளை கிணறுகளை மாற்றி புதிதாக அமைத்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 3வது மண்டல குழு தலைவர் குமார், கவுன்சிலர் அஞ்சனா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.