தினகரன் 20.08.2010
ஆக்கிரமிக்கப்பட்ட 39.05 ஏக்கர் மாநகராட்சி நிலம் மீட்பு கோவை, ஆக 20:
கோவை மாநகராட்சியின் 78 கோடி ரூபாய் மதிப்பிலான 39.05 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டது. கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் இடம் உள்ளது. மாநகராட்சியின் குப்பை கிடங்கு இங்கே செயல்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 100 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கை ஒட்டியுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வருவதாக தெரியவந்தது.
நேற்று முன் தினம் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா குப்பை கிடங்கில் ஆய்வு நடத்தினார். அப் போது மாநகராட்சி இடத்தில் தனியார் அத்துமீறி நுழைந்து வேலி அமைத்து மனை பிரிவு உருவாக்கியிருப்பதை கண்டறிந்தார்.
உடனடியாக இடத்தை மீட்கவேண்டும் என உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து மாநகராட்சி செயற்பொறியா ளர் லட்சுமணன், உதவி செயற் பொறியாளர் சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் சவுந்திரராஜன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜோதிலிங்கம், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 78 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இடத்தை தனியார் ஆக்கிரமித்து விட்ட தாக தெரிகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மீட்கப்பட்ட இடத்தை தனியார் சொசை ட்டி நிர்வாகம் கேட்டது. ஆனால் மாநகராட்சி தரப் பில் இடம் தர மறுக்கப்பட் டது. சொசைட்டி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தது.
வழக்கில் மாநகராட்சி க்கு இடம் சொந்தம் என குறிப்பிடப்பட்டது. இருப்பினும் அந்த சொசைட்டி நிர்வாகம் அரசுக்கு எழுதி இடத்தை கேட்டு கொண்டே இருந்தது. உயரதிகாரிகள் ஆய்வு செய்து திடக்கழிவு திட்டத்திற்கு இடம் தேவை என தெரிவித்து விட்டனர்.
இந்த நிலையில் தான் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. இடத்தை மீட்டு விட்டோம். இனி எந்த சிக்கலும் இல்லை, ” என்றனர்.
கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் தனியாரால் ஆக்கிரமிக் கப்பட்ட மாநகராட்சி இடத்தை அதிகாரிகள் நேற்று மீட்டு போர்டு வைத்தனர்.