தினமணி 08.02.2010
அறந்தாங்கியில் 3,980 பேருக்கு சொட்டு மருந்து
அறந்தாங்கி, பிப். 7: அறந்தாங்கி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3,980 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சியில் பேருந்து நிலையம், காந்தி பூங்கா, அங்கன்வாடி உள்பட 11 மையங்களில் இந்த முகாம் நடைபெற்றது.
காந்தி பூங்கா மையத்தில் நடைபெற்ற முகாமுக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் வி.விஜயா துரைராஜ் தலைமை வகித்தார்.
அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் பழ. மாரியப்பன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி முகாமை தொடக்கிவைத்தார்.
துப்புரவு அலுவலர் பி. சங்கர சபாபதி, ரோட்டரி கிளப் செயலாளர் கை. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர் ச.சுமதி சங்கர், துப்புரவு ஆய்வாளர் எஸ். சேகர், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் அ. சுந்தரிபாய், ரோட்டரி முன்னாள் தலைவர்கள் நா. சந்திரமோகன், ரெ. அமரகெங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலியோ சொட்டு மருந்து பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி அலுவலர்களும், ரோட்டரி கிளப் உறுப்பினர்களும் நகர் முழுவதும் வாகனங்களில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.