தினகரன் 28.07.2010ச்
மும்பையில் 4 இடங்களில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம்
மும்பை, ஜூலை 28: ‘கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டத்துக்கு மும்பையில் 4 இடங்களை அரசு அடை யாளம் கண்டுள்ளது’ என்று நகர வளர்ச்சி துறை இணை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் கூறினார்.
மகாராஷ்டிரா சட்ட மேல வையில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் தொடர்பான விவாதத்துக்கு நேற்று நகர வளர்ச்சி துறை இணை யமைச்சர் பாஸ்கர் ஜாதவ் பதில் அளித்து பேசிய தாவது:
மும்பையில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத் தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டுள் ளது.
கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தின் கீழ் பிளான்ட்களை அமைக்க நகரில் 4 இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது. முதல்வர் அசோக் சவான் சென்னை சென்று இந்த பிளான்ட்டின் செயல்பாடு பற்றி அறிந்தார். பின்னர் கமிட்டி ஒன்றை அமைத்தார்.
இந்த திட்டத்தை அரசு&தனியார் இணைந்து மேற்கொள்ளும். விரைவில் இதற்கான டெண்டர்கள் விடப்படும். இவ்வாறு பாஸ்கர் ஜாதவ் பேசினார். சிவசேனா உறுப்பினர் தீபக் சாவந்த் பேசுகை யில்,”உப்புத்தன்மை நீக்கப் பட்ட கடல்நீரை குடிநீராக பயன்படுத்த முடியாது. குளிப்பதற்கு, துணி துவைக்க போன்ற இதர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்” என்றார்.