தினகரன்
நாகர்கோவில்
, ஆக.4: நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டு பார்வதிபுரம், சிங்காரதோப்பு, நெசவாளர் காலனி, டெரிக் சந்திப்பு, நேசமணி நகர், கேபி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வசதியாக பார்வதிபுரம் பகுதியில் ஆற்றை கடந்து செல்ல புதிய தரைவழி பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ரூ4 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜன் எம்.எல்.ஏ நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். புதிய பாலம் திறப்புவிழா நிகழ்ச்சி பார்வதிபுரம் குழந்தை ஏசு ஆலயம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு 27 வது வார்டு நகர்மன்ற உறுப்பினரும், வட்ட செயலாளருமான அருள்ராஜன் தலைமை வகித்தார். பங்குதந்தை ஹென்றி, துணை தலைவர் சகாதேவன், செயலாளர் மேரி அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜன் எம்.எல்.ஏ புதிய பாலத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் லாரன்ஸ், லாரன்ஸ் சாம், அலெக்ஸ் தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.