தினமணி 19.08.2010
4 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு கேடயம்
முதுகுளத்தூர், ஆக. 18: முன்னாள் படைவீரர்கள் நலத்திட்ட கொடிகள் அதிக விற்பனையைப் பாராட்டி, முதுகுளத்தூர் உள்ளிட்ட 4 பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் கேடயம் பரிசு வழங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர்கள் முனியாண்டி (முதுகுளத்தூர்), செந்திலன் (சாயல்குடி), இளவரசி (ஆர்.எஸ்.மங்கலம்), நெடுஞ்செழியன் (தொண்டி) ஆகியோர், நிர்ண யிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாகவே முன்னாள் படை வீரர்கள் நலத்திட்ட கொடிகளை விற்பனை செய்தனர். இதைப் பாராட்டி இவர்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.