தினகரன் 21.09.2010
பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 4 நாள் பயிற்சி முகாம்
சேத்துப்பட்டு, செப். 21:சேத்துப்பட்டு புனித தோமையார் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள தலைவர், துணைத் தலைவர், அலுவலர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதித்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்கான 4 நாள் அடிப்படை ஆதார பயிற்சி நேற்று தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் நீலகண்டன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர்கள் சேஷாசலம் (பெரணமல்லூர்), இப்ராகிம் (பெரணமல்லூர்), அருள்குமார் (தேசூர்), பழனி (கீழ்பென்னாத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேத்துப்பட்டு பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். பேரூராட்சிகளுக்கான அடிப்படை ஆதார பயிற்சியை கோயம்புத்தூர் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் வழங்கினார்.
இதில் பெரணமல்லூர், தேசூர், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர்கள் பிரேமா வெங்கடேசன், மஞ்சுளா மோகன், பன்னீர்செல்வம், துணைத்தலைவர்கள் மோகன், ஆண்டாள் கமலக்கண்ணன், சுந்தரமூர்த்தி, 57 மன்ற உறுப்பினர்கள் உட்பட அலுவலக ஊழியர்கள் 8 பேர் கலந்துகொண்டனர்.