தினகரன் 02.11.2010
4 ஆண்டுகளில் மாநகராட்சி சாதனைகோவை
, நவ.2: மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளில் பெரிய திட்டப்பணி களை நடத்தி சாதனை ப டைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா நேற்று நடந்தது. முன்னதாக மாவட்ட கலெ க்டர் அலுவலகத்திலிருந்து மாநகராட்சி நோக்கி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் மேயர் வெ ங்கடாசலம் கலந்து கொண் டு பேசுகையில், “க டந்த 4 ஆண்டுகளில் கோ வை மாநகராட்சி நிர் வாகம் நல் ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. செம்மொழி மா நாட்டிற்காக 300 கோடி ரூபாய் திட்டப்பணி வேக மாக முடிந்தது. திட்ட சா லை பணிகளை வெகுவா க நிறைவேற்றியிருக்கிறோம்.மத்திய சிறையை வெள்ளலூருக்கு மாற்றவேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்காக மாநகராட்சி நிர் வாகம் 75 ஏக்கர் நில த்தை வெள்ளலூரில் ஒதுக்கப்பட்டது. இதற்கு மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் திட்ட பணி நட த்தப்பட்ட து“என்றார். 1397776754 ணை மேயர் கார்த்திக் பேசு கையில், “மாநகராட்சி சார்பில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணி, 113.74 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டம், 96.50 கோடி ரூபாய் செலவில் திட க்கழிவு மேலாண்மை திட்டம், குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டம், 127 கோடி ரூபாய் செலவில் குளங்களை மேம்படுத்தும் திட்டம் என பல்வே று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பில்லூர் 2வது குடிநீர் திட்டம் மூலம் மாநகராட்சியில் கிழக்கு, வட க்கு மண்டல பகுதியில் குடி நீர் பிரச்னை தீர்க்கப்படும். மாநகரில் 4 ஆண்டு நடந்த பணிகளை மக்கள் திருப்தியடைந்துள்ளனர். கோவை நகரில் அடிப்படை வசதிகள் வெகு வேகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிசைகள் மாறி, கான்கிரீட் வீடுகளாகி வருகிறது, ” என்றார்.இதில் துணை கமிஷனர் பிரபாகரன், மேற்பார்வை பொறியாளர் பூபதி, செயற்பொறியாளர்கள் சுகுமார், லட்சுமணன், கணேஷ்வரன், தெற்கு மண்டல தலைவர் பைந்தமிழ், எதிர்க்கட்சி தலைவர் உதயகுமார், கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, தமிழ்செல்வி, மீனா, ராஜேந்திரபிரபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.