தினத்தந்தி 27.11.2013
ஈரோடு மாநகராட்சியில் ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி

ஈரோடு மாநகராட்சி 3–வது மண்டலத்துக்கு
உள்பட்ட 44–வது வார்டு பெரியார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
பகுதியில் ரூ.4 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதற்காக
ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணி நேற்று நடந்தது. முன்னதாக நடந்த பூமி
பூஜைக்கு மண்டல தலைவர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்
மாநகராட்சி உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் செந்தாமரை உள்பட
பலர் கலந்து கொண்டனர்.