தினமணி 10.12.2009
4-வது கூட்டுக்குடிநீர் திட்டம்: திóட்ட வரைவு தயாரிக்க ரூ.8.5 கோடி ஒதுக்கீடு
திருப்பூர், டிச.9: விரிவுபடுத்தப்படும் திருப்பூர் மாநகராட்சி பகுதியின் 2020-2040ம் ஆண்டு மக்கள் தொகை யை கணக்கிட்டு 4வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட வரைவு தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 5 லட்சம். இம்மக்கள் தொ கைக்கு தற்போதுள்ள 1,2 மற்றும் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நபருக்கு நாளொன் றுக்கு 102 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு இக்குடிநீர் தொடர்ந்து பற்றாக்குறையை ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் மாநகராட்சியின் 52 வார்டுகளு டன் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் ஆண்டிபா ளையம், முருகம்பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், தொட்டிபாளையம், தொட்டியமண்ணரை, வீரபாண்டி, முத்தணம்பாளையம் ஆகிய 8 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு திருப்பூர் மாநகராட்சியை விரிவுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.
அவ்வாறு, மாநகராட்சி விரிவுபடுத்தப்படும் போது அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு தற்போ துள்ள கூட்டுகுடிநீர் திட்டங்கள் மூலம் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இருக்காது என்ப தை கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகராட்சியில் 4வது கூட்டுக்குடிநீர் திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவுபடுத்தப்படும் மாநகராட்சி பகுதியின் 2020-2040ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தி ல் கொண்டு செயல்படுத்தப்படும் இக்குடிநீர் திட்டத்துக்கான திட்ட வரைவு தயாரிக்கும் பணி புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முதல், 2, 3-வது கூட்டுக்குடிநீர் திட்டங்களை இணைத்தல் மற்றும் புதியதாக உருவாக்கப் படும் 4வது கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைத்தல் என 2 பிரிவாக இத்திட்ட வரைவுகளை தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது விரிவுபடுத்தப்பட்ட மாநகராட் சியில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தெரிவித்தார்.