தினமணி 28.07.2010
புதிதாக 400 ஆழ்குழாய்க் கிணறு: மேயருக்கு கடிதம்
பெங்களூர், ஜூலை 27: பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க புதிதாக 400 ஆழ்குழாய்க் கிணறுகளை தோண்டும் திட்டத்தை திரும்பப்பெறுமாறு மாநகராட்சி மேயர் எஸ்.கே. நடராஜுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று
பெங்களூர் பல்கலைக்கழக துணை வேந்தர் என். பிரபு தேவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியது: பெங்களூரில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மழையும் குறைவாகப் பெய்து வருகிறது. ஆனால் குடிநீர்த் தேவையோ அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நகர வார்டுகளில் மொத்தம் 400 புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. இந்த திட்டத்தை திரும்பப்பெறுமாறு மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர்.