துறையூர் நகரில் 42 ஆழ்குழாய் கிணறு அமைப்பு நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்
துறையூர்: வறட்சியை சமாளிக்க துறையூர் நகரில் 42 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத் தில் தெரிவிக்கப்பட்டது.
துறையூர் நகர்மன்ற கூட் டம் தலைவர் மெடிக்கல் முரளி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதி வாணன், பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் செல்வராஜ், நல்லதம்பி, மனோகரன், சுதாகர், பாஸ் கர், கார்த்திகேயன், விஜயசங்கர், கோபி, தனம் கருப் பையா, சுதாசெங்குட்டுவன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே விவாதம் நடந்தது.
நல்லதம்பி (திமுக): கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள்.
அஸ்வின்குமார் (காங்.): அஜண்டாவில் 4 மணிக்கு தொடங்கும் என்று போட்டிருந்தாலும் அதன்படி கூட்டம் தொடங்காமல் சவுகரியம்போல் கூட்டம் நடத்துகிறீர்கள். இன்று முக்கால் மணிநேரம் தாமதம். சென்ற கூட்டம் பட்ஜட் தாக்கல் செய்யும் கூட்டமாக இருந்தும்கூட 10 நிமிடம் தாமதமாக தொடங்கி 2 நிமிடங்களில் முடிந்து விட்டது. அப்படியென்றால் மக்கள் பிரச்னையை எப்படி பேசு வது. எனது வார்டில் தண் ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. எனது வார்டிலும், பக்கத்து வார்டிலும் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வரவில்லை என்றார்.
பதிலளித்த தலைவர், வறட்சியை சமாளிக்க நகராட்சி பகுதியில் 42 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் வார்டு மக்கள் கேட்டுக் கொண்டதற்காக லாரியில் ஒரு நாள் தண்ணீர் வழங்கினோம். பிரச்னையை சொன்னால்தான் தெரியும் என்றார்.
பொறியாளர் பேசுகையில், இன்னும் தேவையான இடத்தை உறுப்பினர் தேர்வு செய்து சொன்னால் புதிய போர் போட்டுத் தருகிறோம் என்றார்.
கவுன்சிலர் சுதாகர்: தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதற்கு நடவடிக்கை இல்லை என்றார்.
ஆணையர்: அடுத்த கூட்டத்திற்குள் மின்மோட் டாரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்திலேயே தண்ணீர் விநியோகத்திற் காக ஜெனரேட்டர் வசதி செய்துள்ள நகராட்சி நமது நகராட்சி தான் என்றார்.
நல்லதம்பி (திமுக): எனது வார்டுக்கு காசிக்குளம் தண்ணீர்தான் கிடை த்து வந்தது. எனவே அங்கு சைடு போர் போட்டு மீண் டும் அங்கிருந்து தண்ணீர் எடுத்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.
ஆணையர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.