தினமலர் 31.03.2010
‘வருமுன் காப்போம்’ முகாமில் ஆயிரத்து 426 பேருக்கு சிகிச்சை
வந்தவாசி: வந்தவாசி நகராட்சி மற்றும் செய்யாறு சுகாதார மாவட்ட நோய்தடுப்பு மரு ந்து துறை சார்பில், வந்தவாசி ஒன்றிய மேற்கு பாடசாலையில் ‘வருமுன் காப்போம்‘ திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகராட்சி தலைவர் சீனுவாசன் தலை மை வகித்தார். துணைத்தலைவர் வாசுகி, கவுன்சிலர்கள் உசேன், அன்சாரி, ஜலால், நவாப்ஜான், பழனியம்மாள், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் வரவேற்றார்.முகாமில், வந்தவாசி எம்.எல்.ஏ., கமலக்கண்ணன் குத்துவிளக்கேற்றி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். மேலும், தாசில்தார் முருகேசன், தி.மு.க., நகர செயலாளர் லியாகத்பாஷா உள்ளிட்ட பலரும் பேசினர்.வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஆயிரத்து 426 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 30 பேர்கள் உயர் சிகிச்சை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.