தினத்தந்தி 21.11.2013
அரும்பார்த்தபுரத்தில் ரூ.43லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி அமைச்சர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி
உழவர்கரை தொகுதி வில்லியனூர் கொம்யூன் அரும்பார்த்தபுரம் திருக்குறளார்
நகர் உட்புற வீதிகளில் ரூ.43 லட்சத்து 95 ஆயிரம் செலவில் தார் சாலை
அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழாவில் அமைச்சர் பன்னீர்
செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி சாலை அமைக்கும் பணியை தொடங்கி
வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம்,
செயற்பொறியாளர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் உழவர்கரை தொகுதி பிச்சைவீரன்பட்டு பெரம்பை ரோட்டில் இருந்து
அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்தும் பணி ரூ. 45 லட்சம்
செலவில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம்
கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி சாலை மேம்படுத்தும் பணியை தொடங்
வைத்தார்.