தினகரன் 31.05.2010
ஆலந்தூர் பகுதியில் 430 பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி
ஆலந்தூர், மே 31: ஆலந்தூர் நகராட்சிப் பகுதியை சேர்ந்த 430 பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் விழா, ஆலந்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
ஆலந்தூர் நகராட்சி தலைவர் ஆ.துரைவேலு தலைமை வகித்தார். ஆணையர் என்.மனோகரன், துணை தலைவர் என்.சந்திரன், என்ஜினியர் மகேசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் பழனிச்சாமி வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 430 பெண்களுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 80ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
குழந்தை பெற்றபின் வழங்கக் கூடிய “ஜனனி சுரட்ஷா யோஜனா” திட்டத்தின் கீழ் 200 பெண்களுக்கு தலா ரூ.6000 வீதம் ரூ.1லட்சத்து 20 ஆயிரத்துக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
கவுன்சிலர்கள் ஜெயகுமார், சிவபாஸ்கர், இரா.பாஸ்கர், சச்சீஸ்வரி, திமுக நகர செயலாளர் பி.குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.