தினமணி 15.12.2009
தளி தொகுதியில் ரூ.4.40 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
ஒசூர், டிச. 14: தளி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4.40 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார் .
தளி பெரிய ஏரியில் பொதுப்பணித் துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி நிதியில் மேம்பாலம், தேன்கனிக்கோட்டை– பஞ்சப்பள்ளி சாலையில் ரூ.68 லட்சத்தில் மேம்பாலம் அமைத்தல், அஞ்செட்டி–தக்கட்டி சாலையில் உள்ள ஜோதிபுரம் கிராமத்தில் ரூ.64 லட்சத்தில் மேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.
விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.லகுமைய்யா, மாவட்ட துணைச் செயலர் பி.சி.நஞ்சப்பா, ஊடேதுர்க்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.