தினமணி 07.04.2013
தினமணி 07.04.2013
ரூ. 45 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு இயந்திரங்கள்
சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிக்கும் பணிக்காக ரூ. 45 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மண்டலங்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்புப் பணியை
தீவிரப்படுத்துவதற்கு புதிய 156 கைத்தெளிப்பான்களும், ஆட்டோவில்
பொருத்தக்கூடிய 15 பெரிய புகைப் பரப்பும் இயந்திரங்களும் கொள்முதல்
செய்யப்பட்டன. இந்த இயந்திரங்களின் மொத்த மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும்.
இந்த இயந்திரங்களை ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர்
சைதை துரைசாமி மண்டலங்களுக்கு சனிக்கிழமை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்
மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் மகேஷ்வரன், நிலைக்குழுத்
தலைவர் (பொது சுகாதாரம்) ஏ. பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.